Nagaratharonline.com
 
NEWS REPORT: சிலம்பு விரைவு ரயில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வாரம் மூன்று நாள்கள் இயக்கப்படும்  Sep 28, 15
 
சென்னை-மானாமதுரை சிலம்பு விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்துள்ளதற்கு, காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தினர் வரவேற்றுள்ளனர்.

சிலம்பு விரைவு ரயில் (எண்:16181) சென்னையிலிருந்து மானாமதுரைக்கு புதன் மற்றும் சனிக்கிழமை என வாரம் இரு முறை இயக்கப்படுகிறது.

இந்த ரயில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் என்றும், இனி வாரம் மூன்று நாள்கள் இயக்கப்படும் என்றும், தெற்கு ரயில்வே மதுரை மண்டல நிர்வாகம் அறிவித்துள்ளது.