Nagaratharonline.com
 
வேகுப்பட்டியில் சிறப்பு கிராமசபை.  Sep 6, 15
 
வேகுப்பட்டி ஊராட்சியில் வீடுதோறும் கழிப்பறை அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2020-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம்கழிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில், அனைத்து ஊராட்சிகளையும் தூய்மையான ஊராட்சிகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, வேகுப்பட்டி ஊராட்சியில் வீடுதோறும் கழிப்பறை அமைத்து சுகாதாரத்தை பேண வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமைவகித்தார். துணைத் தலைவர் பெரி. முத்து முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையர் வி. வேலு பங்கேற்று திறந்தவெளியில் மலம்கழிப்பதால் ஏற்படும் தீமைகள், வீடுதோறும் கழிப்பறை அமைப்பதன் அவசியம் குறித்து விளக்கினார்.

முன்னதாக, தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.