Nagaratharonline.com
 
NEWS REPORT: ரயிலில் தூங்கும் பயணிகளை எழுப்பிவிட புதிய வசதி அறிமுகம்  Jul 27, 15
 
ரயில்களில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு பயணிக்கும் பயணிகளை, அவர்கள் இறங்க வேண்டிய நிலையம் வந்ததும் எழுப்பிவிடும் வகையில் "ட்ரெயின் டெஸ்டினேஷன் அலார்ம் கால்' என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட தொலைவு செல்லும் பயணிகள் பயணக் கலைப்பு தெரியாமல் பயணிப்பதற்காக பெரும்பாலும் இரவு நேர பயணத்தையே விரும்புகின்றனர். இதன் மூலம், தூங்கிக் கொண்டே பயணிக்கலாம்.
அவ்வாறு ரயில் பயணத்தின்போது நிம்மதியாகத் தூங்கும் பயணிகள், சில நேரங்களில் தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவறவிட்டு விடுகின்றனர். இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும். பயணிகளுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், இந்திய ரயில்வே துறை "ட்ரெயின் டெஸ்டினேஷன் அலார்ம் கால்" என்கிற வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள பயணிகள் தங்களது பயணச் சீட்டின் பி.என்.ஆர். எண், இறங்க வேண்டிய ரயில் நிலையத்தின் விவரம், இறங்கும் ரயில் நிலையத்தின் எஸ்டிடி கோட் ஆகியவற்றை 139 ரயில்வே விசாரனை எண்ணில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு, அவர்கள் இறங்க வேண்டிய இடம் வருவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன்னதாக ரயில்வே துறையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துவிடும்.

எனவே, பயணிகள் எந்த கவலையும் இன்றி நிம்மதியாக உறங்கிக் கொண்டே இனி பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
139 சேவை புதுப்பிப்பு: அதோடு 139 என்கிற ரயில்வே விசாரணை எண் சேவையும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.