Nagaratharonline.com
 
சென்னை மாநகரப் பேருந்துகளை எளிதாக அடையாளம் காண வழித்தட எண்களில் மாற்றம்  Feb 12, 15
 
பேருந்துகளை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், பேருந்து வழித்தட எண்ணை ஒரே மாதிரியாக மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

அதாவது பிராட்வேயிலிருந்து வெவ்வேறு வழிகளில் தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் 102 என்ற எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அதாவது 21H பேருந்து வழித்தடம் 102 எனவும், T21 என்ற வழித்தடம் 102 K என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளன.

இதுபோல் T51 வழித்தட பேருந்துக்கு 95 என்ற எண்ணும், டி51எஸ் என்ற வழித்தடத்துக்கு 95சி என ஒரே எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் 20 வழித் தடங்களில் முதல் கட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் அனைத்துப் பேருந்துகளிலும் பழைய எண், புதிய எண் அடங்கிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் அறிவிப்புகள் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த மூன்று வார காலங்களில் பிற பேருந்துகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படும்