Nagaratharonline.com
 
424 ஆண்டுகளாக, நெற்குப்பையிலிருந்து பழனிக்குசெல்லும் நகரத்தார் காவடிகள்  Feb 1, 15
 
நெற்குப்பையிலிருந்து குப்பாபிச்சாஞ்செட்டி குமரப்பன் பரம்பரையினர் 424 ஆண்டுகளாக பழனி காவடி யாத்திரை மேற்கொண்டுவருகின்றனர்.

நெற்குப்பையிலிருந்து 1590 ஆம் ஆண்டு குப்பாபிச்சாஞ்செட்டி குமரப்பன் பழனி பாதயாத்திரை மேற்கொண்டனர். தொடர்ந்து 1591 ஆம் ஆண்டு குமரப்பனும் அவரது மனைவி சிட்டாளும் பழனிக்கு சர்க்கரைகாவடி முதன்முதலாக எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள நகரத்தார்கள் காவடி பயணம் மேற்கொண்டுள்ளனர். இóச்சிறப்பு மிக்க காவடிப் பயணம் வெள்ளிக்கிழமை நெற்குப்பையில் உள்ள சாமி வீட்டிலிருந்து புறப்பட்டது.

வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 29 காவடிகள் புறப்பட்டன. இங்கு பூஜை செய்யப்பட்ட வேல் சர்க்கரைப் பையில் எடுத்துச் செல்லப்பட்டு பழனியில் உள்ள அன்னதான மடத்தில் ஐந்து நாட்கள் அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. இக்காவடி யாத்திரையை ஜெயங்கொண்டான் செட்டியார், சந்தன ஐயா சண்முகம் வழிநடத்திச் செல்கின்றனர். குமரப்பன் வாரிசுகளால் எடுத்துச் செல்லப்படும் காவடி கட்டளைக் காவடி, முத்திரைக் காவடி என்று அழைக்கப்படுகிறது. இக்காவடிகள் மட்டுமே பழனி சன்னிதானத்தில் பூஜிக்கப்படுகிறது.

இப்பாதயாத்திரை புறப்பாடு நிகழ்ச்சியில் கோவிலூர் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், காசி நாட்டுக்கோட்டை முன்னாள் தலைவர் அடைக்கப்பச் செட்டியார், பழனி அன்னதான மட டிரஸ்டி பட்டாபி, கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.குமரப்பன், சிங்காரம் மற்றும் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.