Nagaratharonline.com
 
கும்பாபிஷேகப் பணிகள்: பார்த்தசாரதி கோயில் மூலவர் சன்னதி 3 மாதங்களுக்கு மூடல்  Jan 25, 15
 
கும்பாபிஷேகப் பணிகள் காரணமாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவர் சன்னதி மூன்று மாதங்களுக்கு மூடப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலாகும். சென்னையைச் சேர்ந்த பக்தர்கள், வைகுண்ட ஏகாதசியின் போது ஸ்ரீரங்கத்துக்குச் செல்ல முடியாதவர்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நடைபெறும் விழாவில் பங்கேற்பார்கள்.

பணிகள் நிறைவடைந்ததும், கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

பக்தர்களின் அதிருப்தி குறித்து, கோயில் நிர்வாகத்திடம் கேட்ட போது, "சீரமைப்புப் பணிகள் காரணமாகவே மூலவர் சன்னதி மூடிவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நரசிம்மர், வரதர், திருமழிசை ஆழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோரை பக்தர்கள் தரிசிக்கலாம்.

மேலும், பார்த்தசாரதி, வேதவல்லி தாயார், ஆழ்வார்கள் உள்ளிட்ட பிற சுவாமிகளை கண்ணாடி அறையில் தரிசிக்கலாம். பணிகள் முடிவடையும் வரை பக்தர்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்' என்றனர்.