Nagaratharonline.com
 
மதகுபட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் தாறுமாறாக வரும் பஸ்  Dec 11, 14
 
மதகுபட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் தாறுமாறாக பஸ்களை ஓட்டுவதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். மதகுபட்டி பஸ் ஸ்டாண்டிற்கு திருச்சி, காரைக்குடி, மதுரை, சிவகங்கையில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் உள்ளே, வெளியே செல்ல தனி வழி உண்டு. ஆனால் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் முறையாக வராமல், தாறுமாறாக வந்து செல்கின்றன. இதனால், பயணிகள் அச்சத்தில் தவிக்கின்றனர்.