Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்  Nov 25, 14
 
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை 2-ஆவது சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சிவபெருமானுக்கு 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட பால் கொண்டு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிவலிங்க வடிவில் 1008 சங்குகள் அடுக்கப்பட்டு சுற்றிலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் புனித தீர்த்தத்தால் நிரப்பப்பட்ட கலசங்களுக்கும் வெண்சங்குகளுக்கும் 10 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்களால் சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் சிவபெருமானுக்கு தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களாலும் 1008 வெண் சங்குகளில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த பாலினாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு 7 மணியளவில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.