Nagaratharonline.com
 
இந்தியர்களுக்கு மட்டும் WhatsApp சந்தா இல்லை: 'ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரீ'  Nov 9, 14
 
WhatsApp நிறுவனம் தங்களது சேவையை பயன்படுத்த இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா இல்லை என்று அறிவித்துள்ளது.
செல்போனில் SMS அனுப்பிய காலம் மெதுவாக மலையேறிக் கொண்டிருக்கிறது. எதற்கு காசு கொடுத்து SMS அனுப்ப வேண்டும், எடுடா போனை அடிடா மெசேஜை அனுப்புடா WhatsApp ல் என்று இருக்கும் காலம் இது.

WhatsApp இலவசமாக மெசேஜ் அனுப்ப முடியும் என்பதால் அது பலருக்கும் பிடித்துள்ளது. WhatsApp சேவையை பயன்படுத்த ஆண்டு சந்தாவாக ரூ.61 செலுத்த வேண்டும். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா எதுவும் கிடையாது என்று WhatsApp அறிவித்துள்ளது. ஆயுள்காலத்திற்கும் சந்தா இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.