Nagaratharonline.com
 
அரிமழம் சத்திரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் சிவராத்திரி விழா  Feb 13, 10
 
புதுக்கோட்டை,​​ பிப்.​ 12: ​ ​ ​ ​ புதுக்கோட்டை மாவட்டம்,​​ திருமயம் வட்டம்,​​ அரிமழம் அருள்மிகு சத்திரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

​ ​ ​ ​ ​ விழாவையொட்டி,​​ நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம்,​​ காவடிகளைச் சுமந்து அம்மனை வழிபட்டனர்.

​ ​ ​ ​ ​ ​ இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி விழா மற்றும் ​ பாட்டையா குருபூஜை திருவிழா இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்.​ மிக விமரிசையாக நடைபெறும் இவ்விழா நிகழாண்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

​ ​ ​ ​ ​ நவராத்திரி திருவிழாவையொட்டி காலை 11 மணிக்கு அரிமழம் ஜெயவிளங்கி அம்மன் கோயில் அருகிலிருந்து மஹாகணபதி ஹோமம் மற்றும் ​ சக்தி பூஜை நடைபெற்றது.​ தொடர்ந்து,​​ பால்குடங்கள்,​​ காவடி ஊர்வலம் தொடங்கியது.

​ ​ ​ ​ ​ ​ பாலக்கோடு பம்பை வித்வான் கே.​ குமாரவேல்,​​ சுனையக்காடு சுப்பையா குழுவினரின் நையாண்டி மேளம்,​​ ஒயிலாட்டம்,​​ நடிகர் குள்ளமணி குழுவினரின் நடனம் ஆகியவற்றுடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலை ஊர்வலம் வந்தடைந்தது.

​ ​ ​ ​ ​ ​ இதைத் தொடர்ந்து,​​ பகல் 1 மணியளவில் அம்மனுக்கு நடைபெற்ற பாலாபிஷேக வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.​ தொடர்ந்து,​​ ​ மாலை 6 மணியளவில் திருவிளக்கு வழிபாடும் இரவு 10 மணியளவில் ​ வாணவேடிக்கை மத்தியில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெற்றன.

​ ​ ​ ​ ​ விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினரும் காமாட்சி அம்மன் நற்பணி மன்றத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.​ ​


Source:Dinamani
Feb 13, 2010