Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பையில் இலவச பொது மருத்துவ முகாம்  Nov 3, 14
 
நெற்குப்பை பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி A.G பத்மாவதி மருத்துவமனையும் நெற்குப்பை பேரூராட்சியும் இணைந்து இதயம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாமினை நடத்தின.

நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமிற்கு இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர். மு. நாச்சியப்பன் தலைமை வகித்தார். நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் சஞ்சீவிராஜா முன்னிலை வகித்தார். இம்மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் கண்டறிதல், இதய ஸ்கேன், ஈ.சி.ஜி. ஆகியவை சோதனை செய்து கண்டறியப்பட்டது. மேலும் இதய மருத்துவ நிபுணர் டாக்டர் இளங்கோவன், இதய மயக்க நிபுணர் டாக்டர் ஆதிகணேஷ், எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்தன் காளமேகம், டாக்டர் விஜயராகவன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் திருமுருகன்சேரன், பொது மருத்துவர் அருள்முருகன், ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இம்முகாமில் 898 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு நோய்களுக்கு தகுந்தபடி ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் பல நேய்களுக்கு முகாமில் மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. தீவிர நோய் கண்டறியப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.