Nagaratharonline.com
 
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில்,85 லட்சம் ரூபாய் இழப்பு .  Oct 30, 14
 
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில், விதிகளுக்கு புறம்பாக, தங்க, வைர நகைகளை உருக்கி, உருமாற்றிய வகையில், 85 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரியை காப்பாற்றும் வகையில் அறநிலையத்துறை செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மூலவருக்கு அணிவிக்கப்படும் தங்க, வைர, வெள்ளி நகைகள், அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குபுறம்பாக, உருக்கி உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் சரிபார்ப்பு மற்றும் மதிப்பீட்டில் காட்டப்படவில்லை.இது போன்ற நடவடிக்கைகளால், 85 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மூலவருக்கு சொந்தமான நகைகளை விதிமுறைகளை மீறி உருக்கிய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் அபராதம் மட்டும் விதித்து அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது