Nagaratharonline.com
 
தேவகோட்டையில் செப்டிக்டேங் கழிவுகளை கால்வாயில் விடும் பொதுமக்கள் நோய் பரவும் அபாயம்  Feb 9, 10
 
சிவங்கை மாவட்டம் தேவகோட்டையில் நல்ல குடிநீர் ஆதாரமும், சுகாதார வசதியும் இருப்பதால் ஏராளமானோர் அங்கு குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் இங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வீடுகட்டி வசித்து வரும் பொதுமக்கள் செப்டிக் டேங் கழிவுகளை திறந்த கால்வாயில் விடுகின்றனர்.இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கழிவு நீர் குடிநீரில் கலக்கிறது. இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

திறந்த வெளி கழிப்பிடத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே நவீன கழிவறைகள் அமைக்க வேண்டும் என்று சுற்று சூழல் துறை வலியுறுத்தி உள்ளது. இதனையும் மீறி பொதுமக்கள் அசட்டை தனமாக செப்டிக் டேங் நீரை திறந்த வெளி கால்வாயில் விடுகின்றனர்.

எனவே இவர்கள் மீது நகர சபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


source : Maalaimalar