Nagaratharonline.com
 
பொன்னமராவதி : தெருவிளக்கு அமையுமா?  Feb 9, 10
 
பொன்னமராவதி சேதுராமன் பெட்ரோல் பங்கிலிருந்து யூனியன் அலுவலகம் செல்லும் வரை தெருவிளக்கு அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பொன்னமராவதி சேதுராமன் பெட்ரோல் பங்கிலிருந்து யூனியன் அலுவலகம் செல்லும் சாலை மிகவும் முக்கியமான சாலையாகும்.




இந்த சாலை வழியாகத்தான் திருப்பத்தூர், சிங்கம்புணரி, மதுரை செல்ல முடியும். இந்த சாலையில் யூனியன் அலுவலகம், அரசு போக்குவரத்து கழக டிப்போ, தீயணைப்பு நிலையம், துர்க்கா மருத்துவமனை போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ளன. ஆனால் இரவு நேரங்களில் நடந்து செல்வோர் தெருவிளக்கு இல்லாததினால் பயந்து, பயந்து இருளில் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே சேதுராமன் பெட்ரோல் பங்கிலிருந்து யூனியன் அலுவலகம் செல்லும் வரை தெருவிளக்கு அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்


source : Dinamalar