Nagaratharonline.com
 
பாகனேரியில் டெலிபோன் செயலிழந்து பலமாதமாச்சு; கவனிக்க ஊழியர் இல்லை  Sep 24, 14
 
பாகனேரி தொலைபேசி நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தரைவழி இணைப்புகள் செயல்படாமல் பயனின்றி கிடக்கின்றன.

பாகனேரி தொலைபேசி நிலையத்தின் கீழ் பாகனேரி,பனங்குடி,நடராஜபுரம்,காடனேரி உள்ளிட்ட பகுதியில் 700க்கும் மேற்பட்ட தரைவழி இணைப்புகள் உள்ளன. இதில் 100க்கும் மேற்பட்ட இணைப்புகளில் இன்டெர்நெட் வசதி உள்ளது.இங்கு அடிக்கடி இணைப்புகள் பழுதாகிறது. சில இணைப்புகள் 6 மாதத்திற்கு மேலாக செயல்பாடின்றி உள்ளது.நிரந்த ஊழியர் இருந்தவரை பழுது உடனடியாக சரிசெய்யப்பட்டது. BSNL நிர்வாகம் இங்கு நிரந்தர ஊழியர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.