Nagaratharonline.com
 
NEWS REPORT: பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் தேரோட்டம்  Aug 5, 14
 
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும் திருவிழா நிகழாண்டு 27-ம் தேதி காப்புக் கட்டி தொடங்கியது.

விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு அம்மன் தேரில் எழுந்தருளி, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் கோயிலை வலம் வந்து நிலையை அடைந்தது.

விழாவில் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு அன்னதானம், கலைநிகழ்ச்சி நடைபெற்றது.