Nagaratharonline.com
 
"நகரத்தார் வரலாறும் வெற்றியின் ரகசியமும்' - குறுந்தகடு வெளியீட்டு விழா  Jul 6, 14
 
காரைக்குடியில், மாலதி பழனியப்பன் தயாரிப்பில் வெளியான, "நகரத்தார் வரலாறும் வெற்றியின் ரகசியமும்' என்ற ஆவணப்பட குறுந்தகடு வெளியீட்டு விழா நடந்தது.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் குறுந்தகடை வெளியிட, முன்னாள் அமைச்சர் ரகுபதி, ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகர சத்தி மேலாண்மை கழக தலைவர் அக்ரி எஸ்.பி.,சொக்கலிங்கம், டால்பின் பள்ளி நிர்வாகி ஏ.ஆர்.ராமநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அழகப்பா பல்கலை முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் திருநாவுக்கரசு, மதுரை நகரத்தார் சங்க தலைவர் பழனியப்பன், தொழிலதிபர் மாணிக்கம், முத்து குழும தலைவர் ஞானம், இயக்குனர் அன்புமதி, துலாவூர் ஆதீனம் ஆகியோர் பேசினர். எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் நன்றி கூறினார்.