Nagaratharonline.com
 
திருப்புத்தூர் போஸ்டாபீசில் மின் கட்டணம் செலுத்தலாம்  Jun 18, 14
 
திருப்புத்தூர் போஸ்டாபீசில் குறைந்த சேவைக் கட்டணத்தில் மின் கட்டணம் செலுத்தலாம்.

தனியார் மையங்களில், ரூ.10 லிருந்து ரூ.15 வரை சேவைக்கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், திருப்புத்தூர் போஸ்டாபீசில், ரூ.6 சேவைக்கட்டணத்தில், மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. மின் கட்டணம் ரூ.1000 ஐ தாண்டினால், மட்டும் சேவைக்கட்டணம் ரூ.11 ஆக வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். "ஆன்-லைன் ரயில் டிக்கெட்' வசதியும் இதே நேரத்தில் அளிக்கப்படுகிறது.