Nagaratharonline.com
 
NEWS REPORT: அமர்நாத் பனிலிங்கம் தரிசனத்திற்கு தயார்  Jun 18, 14
 
 
காஷ்மீர் மாநிலத்தின் புண்ணிய தலமான, அமர்நாத் குகையில், பனிலிங்கம் முழுமையாக உருவாகியுள்ளதாக, கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும், ஜூன் மாத இறுதியில் துவங்கி, ஆகஸ்ட் 21ம் தேதி வரை, 55 நாட்கள் இந்த அமர்நாத் புனித யாத்திரை நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, 44 நாட்களாக குறைத்து, ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவு செய்ய, கோவில் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ சான்றிதழுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே, குகை கோவிலுக்கு செல்ல, கோவில் வாரியம் அனுமதி அளிக்கிறது. ஆகாய மார்க்கமாக வரும் பக்தர்கள், ஹெலிகாப்டர் பயணத்திற்கு முன், தங்களுடைய உடல்நலன் குறித்த மருத்துவ சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம் என்று, அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது, சுயம்புவாக உருவாகும் பனிலிங்கம் முழுமையாக உருவாகியுள்ளதாக, கோவில் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு, வரும் 28ம் தேதி, புனித யாத்திரை துவங்குவதால், சாலைகளில் உள்ள, பனிக்கட்டிகளை அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.