Nagaratharonline.com
 
திருப்புத்தூர் தாலுகாவை இரண்டாக பிரிக்கும் திட்டம்; மீண்டும் பரிசீலனை துவக்கம்  Jun 16, 14
 
திருப்புத்தூர் தாலுகாவை இரண்டாக பிரிக்கும் திட்டம் கிடப்பிலிருந்து எடுக்கப்பட்டு, மீண்டும் அரசின் பரிசீலனைக்கு வந்துள்ளது.
இதனால், புதிய தாலுகா விரைவில் உதயமாகும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. திருப்புத்தூர் தாலுகா, மிகவும் பழமையான,பெரிய தாலுகாவாகும்.தேவகோட்டைக் கோட்டத்தில் உள்ளது.கல்லல்,சாக்கோட்டை,திருப்புத்தூர், S,புதூர்,சிங்கம்புணரி ஆகிய 5 ஒன்றியங்களைச் சேர்ந்த 122 ஊராட்சிகள், 3 பேரூராட்சிகளை உள்ளடக்கியது.

இத்தாலுகாவை இரண்டாக பிரிக்க, கடந்த 1989ல் திட்டமிடப்பட்டது.அதற்கான ஆய்வும் வருவாய்த்துறையினர் நடத்தி, சிங்கம்புணரி தலைமையில் புதிய தாலுகா துவக்கவும்,திருப்புத்தூர்,சிங்கம்புணரி உள்ளிட்ட தாலுகாக்களுக்கு,திருப்புத்தூரில் புதிய கோட்ட அலுவலகம் துவக்கவும் திட்டமிடப்பட்டது.

அரசின் பரிசீலனைக்கு வந்துள்ள,இத்திட்டம், நடக்கவுள்ள சட்டசபைத் தொடரில்,""புதிய தாலுகா அறிவிப்பு வரும்' என்ற எதிர்பார்ப்பை மக்களிடையே உருவாக்கியுள்ளது