Nagaratharonline.com
 
தேவகோட்டை நால்வர் கோயிலில் திருஞான சம்பந்தர் குருபூஜை  Jun 15, 14
 
தேவகோட்டையில் உள்ள நால்வர் கோயிலில் திருஞான சம்பந்தர் குருபூஜையும், தேவார கருத்தரங்கமும் நடைபெற்றன.

திருஞான சம்பந்தர் முக்தி பெற்ற வைகாசி மூலம் நாளையொட்டி நால்வர் கோயிலில் திருஞான சம்பந்தர் குருபூஜையும், தேவார கருத்தரங்கம் கவிஞர் அரு.சோமசுந்தரம் தலைமையிலும் நடைபெற்றன. அரு.செந்தில்நாதன் வரவேற்றார்.

பேராசிரியர் சபா.அருணாச்சலம், பேராசிரியர் தேவநாவே வேங்கடாசலம், கவிஞர் கார்மேகம், பேராசிரியர் சுப்பையா, காசிஸ்ரீ காசிநாதன், கவிஞர் வே.பழனியப்பன் ஆகியோர் தேவார பாடல்களை கருத்தரங்கில் ஆய்வு செய்தனர்.

தலைவர் அரு.சோமசுந்தரம் பேசுகையில், திருஞான சம்பந்தர் தன்னை தமிழ்ஞான சம்பந்தர் என்றே பாடுவார். ராமேசுவரம் முதல் ஸ்ரீசைலம் வரை நடந்தே சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் இயற்கையையும் இறைவனையும் இணைத்துப் பாடினார். அவரது பாடல்களில் இயற்கை வளம் இருக்கும், மூன்று வயதில் பாடத் தொடங்கி பதினாறு வயதில் இறைவனோடு கலந்தார். அவர் வாழ்ந்த காலம்பதிமூன்று ஆண்டுகள் தான், ஆனால் அவருடைய பாடல்களை நாம் 1300 வருடங்கள் கழித்தும் பாடுகிறோம் என்று பேசினார்.