Nagaratharonline.com
 
காரைக்குடி - திருச்சி பைபாஸ் ரோட்டில்தொடர் விபத்தால் பலி எண்ணிக்கை உயருகிறது  Jun 3, 14
 
காரைக்குடி - திருச்சி பைபாஸ் ரோடு (108 கி.மீ.,) தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில், வ.சூரக்குடி, ஓ.சிறுவயல், பாதரக்குடி, மானகிரி ஆகிய இடங்களில், கிராசிங் ரோடு உள்ளது. காரைக்குடியிலிருந்து செல்லும் வாகனங்கள், இந்த பைபாஸ் சாலையை கடந்து செல்கிறது. இதற்காக, கிராசிங் பகுதியில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையில் வெளிச்சம் தரும் விளக்குகளோ, எச்சரிக்கை கோடுகளோ இல்லை. கிராசிங்கில் வரும் வாகனங்கள் வேகத்தடுப்பை கவனிக்காமல், ரோட்டை கடக்கிறது.

அவ்வாறு கடக்கும்போது, திருச்சியிலிருந்து வரும் வாகனங்களால் விபத்துக்குள்ளாகிறது. ஓ.சிறுவயல் - காரைக்குடி பைபாஸ் ரோடு கிராசிங்கில், அமைக்கப்பட்ட வேகத்தடை, முதல்வர் ஜெ.வருகையையொட்டி, அகற்றப்பட்டது. மீண்டும் அமைக்கப்படவில்லை. வேகத்தடை சரியாக முறைப்படி அமைக்காததாலும், எச்சரிக்கை விளக்கு இல்லாததாலும், நாளுக்கு நாள் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுவரை, மானகிரி முதல் வ.சூரக்குடி வரையிலான 15 கி.மீ.,தூரத்திற்குள் விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். எனவே, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிர் பலியை குறைக்கும் வகையில், முறையான வேகத்தடை, ஒளிரும் விளக்குகளை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.