Nagaratharonline.com
 
20-ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்வு  May 16, 14
 
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தக் கட்டண உயர்வு வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கும் மே 20-ஆம் தேதிக்குப் பிறகு இந்த கட்டண உயர்வு பொருந்தும்.

புதிய கட்டண உயர்வின் மூலம், மாநகர புறநகர்ப் பகுதிகள் மற்றும் சாதாரண நகரப் பகுதி ரயில்களில் 2-ம் வகுப்பு மாத சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படுகிறது.

இதுவரை ஒரு மாதத்துக்கு 15 முறை செல்வதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.

அது இனிமேல் 25 முறைக்கான பயணத்துக்கான கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.