Nagaratharonline.com
 
அட்சய திருதியை அன்று சர்க்கரை, உப்பு வாங்குங்கள்  May 2, 14
 
நாமும் இந்த அட்சய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் ஸ்ரீலஷ்மிதேவியின் ஆசி கிடைக்கும். இறைவனுக்கு பொன்- பொருள் தந்துதான் வணங்க வேண்டும் என்றில்லை. நம் தகுதிக்கு ஏற்ப சமர்பித்து வணங்கலாம்.

குசேலர் ஸ்ரீகிருஷ்ணருக்கு தன் சக்திக்கேற்ப அவல் மட்டும் தந்துதான் செல்வந்தர் ஆனார். அதேபோல வறுமையில் இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டு வாசலில் "பவதி பிக்ஷந்தேகி'' வந்து நின்ற ஆதிசங்கரருக்கு, உணவு ஏதும் தர வழியில்லாமல் கலங்கிய அந்த குடும்பத்தின் இல்லதரசி, அப்போது தன் வீட்டில் இருந்த காய்ந்த நெல்லி கனியை தந்த பலனால், வறுமையிலும் உயர்ந்த பண்பாட்டில் நிற்கும்

அந்த தாயின் நிலையை எண்ணி மகிழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாட, அதனால் ஸ்ரீமகாலஷ்மியின் மகிழ்ந்து அந்த குடும்பத்தின் தரிதிரத்தை நீக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தினார். இந்த சம்பவம் நிகழ்ந்த நன்னாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்.

அட்சய திருதியை அன்று தங்கம் வெள்ளி வாங்குகிறமோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக சர்க்கரை, உப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும். சக்கரை வாங்கினால் இன்னும் சிறப்பு. எப்படி இனிப்பு இருக்கும் இடம் தேடி எறும்பு வருகிறதோ, அதுபோல் இனிப்பை விரும்பும் ஸ்ரீமகாலஷ்மி இனிப்பு இருக்கும் அந்த வீட்டுக்கு வர காத்திருக்கிறாள்.