Nagaratharonline.com
 
400 ஆண்டுகளாக காவடி சுமந்து செல்லும் நகரத்தார்கள்  Jan 24, 10
 
தேவகோட்டை,ஜன.22: ​ ​ சிவகங்கை மாவட்டம்,​​ தேவகோட்டையிலிருந்து கடந்த 400 ஆண்டுகளாக நகரத்தார்கள் காவடி சுமந்து பழனிக்குப் பாதயாத்திரையாக சென்றுவருகிறார்கள்.

​ நகரத்தார் அதிகம் இருக்கும் 96 ஊர்களிலிருந்து 200 காவடிகள் புறப்பட்டு பாதயாத்திரையாக தைப்பூசத்தன்று பழனி சென்று காவடிகளை செலுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

​ தேவகோட்டையிலிருந்து மட்டும் 40 காவடிகள் செல்கிறது.​

கண்டனூர் பழனியப்பச் செட்டியார் குருநாதராக இருந்து வழிநடத்தி வருகிறார்.

​ ​ இவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி பழனி பாதயாத்திரை பஜனை மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.​ இதற்கு பஜனைக்குழு தலைவர் காந்தி தலைமை வகித்தார்.​ கயிலை மணி நீலா இறைவணக்ம் பாடினார்.​

காசிநாதன் வரவேற்றார்.​ பொற்கிழி கவிஞர் அரு.சோமசுந்தரன்,​​ ஜமீன்தார் நாராயணன் செட்டியார்,​​ பேராசிரியர் சபாஅருணாச்சலம் ஆகியோர் வாழ்த்தினர்.​ கவிஞர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்

Source:Dinamani