Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்ற 54-ம் ஆண்டு விழா  Jan 20, 10
 
திருப்பத்தூர்,ஜன,19:​ சிவகங்கை மாவட்டம்,​​ திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்றம் சார்பில் பட்டிமன்றம் மற்றும் கருத்தரங்கம்,​​ பாட்டு பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.

​ கீழச்சிவல்பட்டியில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளையொட்டி தமிழ்மன்றம் சார்பில் கருத்தரங்கம்,​​ பட்டிமன்றம்,​​ கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.​ 54-ம் ஆண்டு விழாவாக கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த விழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

​ முதல்நாள் நடைபெற்ற நிகழ்ச்சியினை திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ​

ராம.சுப்புராம் தொடங்கி வைத்தார்.​ முதல்நாள் கருத்தரங்கில் அருந்தமிழும் அன்புடைமையும்,​​ தொன்மையில் இனிமை பொங்கலும் தமிழும்,​​ என்ற தலைப்புகளில் கவிஞர்கள் உரையாற்றினார்கள்.

​ அதனைத் தொடர்ந்து கவிஞர் காந்தி,​​ பாரதன்,​​ பேராசிரியர் நமச்சிவாயம் ஆகியோர் இலக்கிய இன்பம்,​​ நல்லதலைவன்,​​ உள்ளங்கவர் சந்திப்பு என்ற தலைப்புகளில் பேசினார்கள்.​ பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

​ ​ இரண்டாம் நாள் விழாவாக ஞாயிற்றுக்கிழமை கார்த்திக்சிதம்பரம்,​​ மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பெரிதும் தேவை வெள்ளிப் பணமே,​​ தங்கக் குணமே என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தை தொடங்கிவைத்துப் பேசியது:

​ ​ கொச்சைத்தமிழ் இல்லாத எளிய முறையியில் ​ தமிழை வளர்க்க வேண்டும்.

​ மொழியை வளர்க்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.​

தமிழ் இலக்கியங்கள் மிகவும் சுவையானவை,​​ அதன் தரத்தை இக்காலத்தில் இருப்பவர்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிய நடையில் கொண்டுவரவேண்டும்.

​ ​ ​ செம்மொழி மாநாட்டில் இதுபோன்ற தமிழ் மன்றங்களும் பாராட்டப்படவேண்டும் என்று கூறினார்.​ அதனைத் தொடர்ந்து பட்டி மன்றமும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.​ ​

​ மூன்றாம் நாள்விழாவாக திங்கள்கிகிழமை சமுதாயநலன் மேலோங்கி நிற்கும் பாடல் என்ற தலைப்பில் பாட்டு பட்டி மன்றம் நடைபெற்றது.​ இந்நிகழ்ச்சிக்கு சிவல்புரிசிங்காரம் முன்னிலை வகித்தார்.​​ ​ ரா.சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.​ கவிஞர்கள் அரு.நாகப்பன் மற்றும் சரஸ்வதி நாகப்பன் கலந்து கொண்டனர்.​ இத்தமிழ்மன்ற நிகழ்ச்சியின் செயலாளர்களாக சு.ப.பழனியப்பன்,​​ ராம.வைரவன்,​​ எஸ்.எம்.பழனியப்பன்,​​ பழ.ஐயப்பன் ஆகியோர் செயல்பட்டனர்.​​ ​ நிகழ்ச்சிகள் அனைத்தும் கீழச்சிவல்பட்டி பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் நடைபெற்றன.

Source:Dinamani Jan 21