Nagaratharonline.com
 
குன்றக்குடி கோயில் கும்பாபிஷேகம்  Mar 19, 14
 
குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில், கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. இக்கோயிலில் 1979 க்கு பிறகு 34 ஆண்டுகள் கழித்து, தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழா, மார்ச் 16 ல் காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. யாகசாலை பூஜை, நேற்று காலை வரை 6 காலங்களாக நடந்தது. சண்முக பெருமானுக்கு 33 யாக குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 12 யாக குண்டங்களும், உத்தம பட்ச யாக சாலையாக அமைக்கப்பட்டு, பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு, விமானம், மூலவர் சன்னதிக்கு திருக்குட நன்னீராட்டு விழா, சிவாச்சாரியார்கள் தலைமையில் நடந்தது.

விமானங்களுக்கு காலை 9:30 மணிக்கும், மூலவர் சன்னதிக்கு காலை 10:00 மணிக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கும், என அழைப்பிதழ் மற்றும் பிளக்ஸ் போர்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், காலை 9:25 மணிக்கே, விமானம், மூலவர் சன்னதிக்கு திருக்குட நன்னீராட்டு முடிந்தது. அறிவித்த நேரத்தை விட, முன்கூட்டியே கும்பாபிஷேகம் நடத்தியதால், வெளியூரிலிருந்து விழாவை காண வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.*