Nagaratharonline.com
 
கடியாபட்டியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்  Mar 9, 14
 
காரைக்குடியிலிருந்து - ராயவரம் செல்லும் அரசு பஸ்கள், கடியாபட்டி பஸ் ஸ்டாண்ட் செல்லாமல், புறவழியிலேயே சென்று விடுவதால்,பயணிகள் அவதிப்படுகின்றனர்.

காரைக்குடியிலிருந்து ராயவரத்துக்கு,கடியாபட்டி வழியாக அரசு பஸ்கள் மட்டுமன்றி,தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
சமீப காலமாக தனியார் பஸ்கள்,கடியாபட்டி பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், கண்மாய் விலக்கில் பயணிகளை இறக்கிவிட்டு சென்று விடுகின்றனர். தற்போது, அவ்வழியே செல்லும் அரசு பஸ்களும் இதையே பின்பற்றுகின்றன. இதனால், முதியோர், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

கோட்டையூரை சேர்ந்த வி.ராமசாமி கூறும்போது: கடியாபட்டி பஸ் ஸ்டாண்டுக்கு, பஸ் செல்லததால், காரைக்குடி டவுனுக்கு வந்து செல்வோர், பொருட்களை தலைச்சுமையாக கொண்டு செல்ல வேண்டியது உள்ளது.
நடத்துனரிடம் கேட்டால், "இறங்கிறீயா? வண்டியை எடுக்கட்டுமா?' என கேட்கிறார், என்றார்.