Nagaratharonline.com
 
நவஜோதிர்லிங்க சுற்றுலா ரயில் மார்ச் 16 - ல் புறப்படும்  Mar 6, 14
 
நவஜோதிர்லிங்க சுற்றுலா ரயில் மார்ச் 16-ஆம் தேதி புறப்படும் என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் மகாலேஸ்வர், ஓம்காரேஸ்வர், சோம்நாத், பீம்சங்கர், திரையம்பகேஸ்வர், குருஸ்னேஸ்வர், அவுங்நாக்நாத் பார்லி, வைத்யநாத், ஸ்ரீசைலம் ஆகிய 9 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் உள்ளன. இந்தத் திருத்தலங்களை தரிசிக்க ஐ.ஆர்.சி.டி.சி. யாத்ரீகர்களின் வசதிக்காக நவஜோதிர்லிங்க தரிசன ரயிலை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த யாத்திரை ரயில் மார்ச் 16 ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்படுகிறது. பக்தர்களின் உணவு வசதிக்காக தென்னிந்திய சைவ உணவு சமைப்பதற்காகவே ஒரு முழு ரயில் பெட்டியும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரை ரயிலில் 15 நாள்கள் கொண்ட சுற்றுலாவுக்கு டீலக்ஸ் ரூ.39,050, கம்ஃபோர்ட் ரூ.32,900, ஸ்டேண்டர்டு ரூ.23,000, பட்ஜெட் ரூ.17,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய சைவ உணவு, தங்குவதற்கு அறை, சுற்றிப்பார்க்க பேருந்து ஆகியவை அடங்கும். இந்த சுற்றுலாவுக்கான முன்பதிவுக்கு 90031 40681 (சென்னை), 90031 40714 (மதுரை), 98409 48484 (காட்பாடி), 90031 40680 (கோவை) ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.