Nagaratharonline.com
 
காரைக்குடியில் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் விபத்து  Mar 1, 14
 
காரைக்குடி செக்காலை ரோட்டிலிருந்து, கண்ணுபிள்ளை தெரு வழியாக, முத்தூரணி கரைக்கும், முத்தூரணி கரையிலிருந்து செக்காலை ரோட்டிற்கு, "விவால்டி' சாலை வழியாக ஒரு வழி பாதை அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தேவகோட்டை, மதுரையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் வரும் பஸ்கள், இன்கம்டாக்ஸ் வீதி வழியாக வந்து, முடியரசனார் சாலை வழியாக பஸ் ஸ்டாண்டை சென்றடைகிறது.பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் வாகனங்கள், கோர்ட் வழியாக இடது புறம் திரும்பி, அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வழியாக கல்லூரி சாலை, சுப்பிரமணியபுரம் முதல் வீதியை அடைகிறது.
கல்லூரி சாலையிருந்து வாகனங்கள் முடியரசனார் சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அதே போல் கல்லுக்கட்டியை சுற்றிலும் "ஒன்வே' ஆக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவற்றில் போதிய போலீசார் எந்நேரமும் இருப்பதில்லை. இதனால், செக்காலை ரோடு, கல்லூரி சாலையிலிருந்து வரும் வாகனங்கள், இந்த ரூட்டில் தடையை மீறி செல்கிறது. அதே போல், போலீசார் இல்லாத நேரத்தில், கல்லூரி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் (டூவீலர், கார்கள் உட்பட) முடியரசனார் சாலை வழியாக செல்லாமல், சுப்பிரமணியபுரம் முதல் வீதிக்கு நேரடியாக செல்கிறது.

இதனால், எதிர்வரும் வாகனங்களால் விபத்துகள் நடக்கிறது. "ஒன்வே ரூட்டில்' போதிய போலீசாரை நியமித்து, விபத்து ஏற்படுவதை தடுக்க முன்வரவேண்டும், என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.