Nagaratharonline.com
 
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு நினைவு தினம்  Feb 26, 14
 
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினக் கூட்டம் நடைபெற்றது.
மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம், வரலாற்றுக் குரல் என்ற தலைப்பில் பேசியது:

தமிழ்ப் பெண்மணியான தில்லையாடி வள்ளியம்மை, 16 வயது வரை மட்டுமே வாழ்ந்தவர். தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் நகரில் பிறந்து பள்ளிக் கல்வியில் தான் பெற்ற சித்ரவதையை உணர்ந்து 1913 இல் காந்தியடிகள் அறிவித்த பெண்கள் போர்ப்படையில் அன்னை கஸ்தூரிபா உடன் சிறை சென்றவர்.

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாள்களிலேயே மரணம் அடைந்தார்.

அவரது கல்லறையை 1997 இல் நெல்சன் மண்டேலா முயற்சியில் தென்னாப்பிரிக்க அரசு புதுப்பித்து மரியாதை செய்துள்ளது என்றார்.