Nagaratharonline.com
 
மதகுபட்டி போலீஸ் ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள்  Feb 26, 14
 
மதகுபட்டியில் மின் வாரிய அலுவலகம்,போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

மதகுபட்டி மின் வாரிய அலுவலகம்,போலீஸ் ஸ்டேஷனும் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ளது. கண்டுப்பட்டி, பாகனேரி, சொக்கநாதபுரம், கீழப்பூங்குடி, அலவாக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும்,மின் வாரிய அலுவலகத்திற்கும் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு பஸ்கள் நிறுத்தம் இல்லாததால் மக்கள் 40 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது.இந்த அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் குடியிருப்புகளும் உள்ளதால் இங்கு அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்.

மேற்கண்ட இடங்களில் பஸ்கள் நிறுத்தி செல்ல அனுமதி இருந்தும் பஸ்கள் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.