Nagaratharonline.com
 
களையிழந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு  Feb 15, 14
 
அரளிப்பாறை மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கிடைக்காததால், சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு களையிழந்து காணப்பட்டது. ஆனால் தடையை மீறி கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் மாசி மகத்தன்று நடத்தப்படுவது வழக்கம். மாவட்டத்தின் மிகவும் பிரபலமான இம்மஞ்சுவிரட்டைக் காண பெண்கள் அதிக அளவில் கூடுவர். ஏனென்றால் பாறையில் அமர்ந்து பாதுகாப்பான முறையில் மஞ்சுவிரட்டைக் காண வசதியாக இருப்பதால் ஏராளமானோர் இங்கு வருவர். இந்த ஆண்டு மஞ்சுவிரட்டுக்கு அனுமதி பெறாததால், போலீஸார் 2 நாள்களுக்கு முன்பே யாரும் மாடுகளை கொண்டுவரக்கூடாது என அறிவிப்பு செய்திருந்தனர்.

மேலும் பல இடங்களில் செக்போஸ்ட் வைத்து வந்த மாடுகளை திருப்பி அனுப்பினர். சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஐந்துநிலை நாட்டார்கள் சார்பில் தொழு முன்பாக பொங்கல் வைக்கப்பட்டு கோவில் மாடுகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்டன. ஆனால் அரளிப்பாறை அருகில் உள்ள வயல் வெளிகளில் கிராமங்களில் இருந்து வந்திருந்த பலர் கட்டுமாடுகளை அவிழ்த்து விட்டனர்.