Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூரில் பிப்.14 ல் தெப்பம்  Feb 8, 14
 
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில், பிப்.14ல் தெப்பம் நடக்கிறது.சிவகங்கை திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில்,பிப்.5 காலை 11.10 மணிக்கு கொடியேற்றப்பட்டது.மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்து,காப்புக்கட்டி உற்சவம் துவங்கியது.தொடர்ந்து ,தினசரி இரவு, திருவீதி உலா நடைபெறுகிறது. நேற்று சிம்ம வாகனத்திலும், இன்று அனுமன் வாகனத்திலும்,நாளை தங்க கருடன் வாகனத்திலும் வீதி உலா நடைபெறும்.ஏழாம் திருநாளன்று, தங்கப்பல்லக்கில் தேவியருடன் பெருமாள் வீதி வலம் வருவார்.பிப்.13 காலை வெண்ணெய்தாழித் திருக்கோலத்தில், பெருமாள் தெப்பமண்டபம் எழுந்தருளுவார்.பகல் ஒரு மணிக்கு, தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெறும்.பிப்.14 காலை, ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் தங்கப்பல்லக்கில் திருவீதி வலம் வந்து, தெப்ப மண்டபம் எழுந்தருளுவார். பகல் ஒரு மணிக்கு ஒரு சுற்று தெப்பம் நடைபெறும். இரவு 10 மணிக்கு மும்முறை சுற்றி,தெப்பம் நடைபெறும்.மறுநாள் காலை பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியர்,சக்கரத்தாழ்வாருடன் தெப்பமண்டபம் எழுந்தருளலும்,தீர்த்தவாரியும் நடைபெறும்.