Nagaratharonline.com
 
வலையபட்டி மெய்யப்பா வள்ளியம்மை பள்ளியில் ஆண்டு விழா  Jan 31, 14
 
வலையபட்டி மெய்யப்பா வள்ளியம்மை காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் ஆண்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்விக்குழுமங்களின் சேர்மன் ஆர்எம்.வி. கதிரேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் எம்.கே.கே.கேஎம். சேதுராமன் செட்டியார், நகரத்தார் சங்க நிர்வாகிகள் எஸ். சொக்கலிங்கம், டி. மல்லிகா, பேராசிரியர் அழகம்மை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.