Nagaratharonline.com
 
பழனி பாதயாத்திரைக் குழுவின் அன்னதான விழா  Jan 17, 10
 
பொன்னமராவதி வலையப்பட்டி அடைக்கலம் காத்தார் கோயில் அருகே பழனிபாத யாத்திரைக் குழுவின் 13ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது.விழாவை முன்னிட்டு அடைக்கலம் காத்தார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. எம்எல்ஏ ராம.சுப்புராம், முன்னாள் எம்எல்ஏ சுப்பையா, திமுக நகர பொருளாளர் அழகப்பன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் மணி, அதிமுக ஒன்றிய செயலாளர் அழகு சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பழனி பாதயாத்திரைக்குழு தலைவர் சிங்காரம் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். அன்னதானத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


source : Dinamalar