Nagaratharonline.com
 
மானாமதுரை-செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில்  Jan 23, 14
 
மானாமதுரை- செங்கோட்டை இடையே பிப்.2-ம் தேதி முதல் அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜன.24) துவங்குகிறது. வாரந்தோறும் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயில் இயங்கும். மானாமதுரையில் இருந்து காலை 9.30-க்கு ரயில் புறப்பட்டு பிற்பகல் 1.15-க்கு செங்கோட்டை சென்று சேரும். செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 2.30-க்கு புறப்பட்டு மாலை 6.15-க்கு மானாமதுரை செல்லும்