Nagaratharonline.com
 
NEWS REPORT: கணினி பற்றி பொது தகவல்கள்  Jan 16, 14
 
இன்டர்நெட் பயன்படுத்தும் சிலருக்கு கணினி சார்ந்த பொதுவான தகவல் தெரியாமல் தான் உள்ளது. கணினி பற்றிய பொது அறிவை தெரிந்து கொள்ளுங்கள்......

* கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் - ஜாக் கில்பி.

* இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்பு - டிரான்சிஸ்டர்.

* உலக கணினி எழுத்தறிவு தினம் - டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.

* Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்.

* விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயர் - ‘புராஜெக்ட் சிகாகோ'

* கணினி வன் தட்டின் (Hard Drive) தந்தை என்றழைக்கப்படுபவர் - அலன் ஷுகார்ட்

* கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் - ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்

* உலகின் முதல் கணினி விளையாட்டு - Space War

* கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி - மதர் போர்ட்

* கேமரா மொபைல் போனை கண்டுபிடித்தவர் - பிலிப் கான்

* கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க பயன்படுத்தும் ஜடி தொழில்நுட்பம் - ஹாக் ஐ