Nagaratharonline.com
 
காரைக்குடி கல்லுக்கட்டியில் கார் பார்க்கிங் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு  Jan 14, 14
 
காரைக்குடி கல்லுக்கட்டியில்,கொப்புடையம்மன் கோயில் தெப்பக்குளத்தை சுற்றி,பேவர் பிளாக் கல் பொருத்தப்பட்ட கார் பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடி கல்லுக்கட்டி, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதியில், நகைக்கடைகள், மளிகை, பித்தளை பாத்திரங்கள், செட்டிநாட்டு மரச்சாமான்கள் கடை, தமிழக மருந்து கடைகள், பேக்கரிகள் உள்ளன. நகரின் முக்கிய வணிக பகுதி என்பதால்,கிராமத்தினர் கூடும் இடமாகவும் உள்ளது. வாகனங்கள் நிறுத்த இடமின்றி, ரோட்டில் நிறுத்துவதால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

காரைக்குடி நகராட்சி சார்பில், கொப்புடையம்மன் கோயில் தெப்பக்குளத்தை சுற்றி ரூ.32 லட்சத்தில் பேவர் பிளாக் கல் அமைக்கப்பட்டது. ரூ.15 லட்சத்தில், ஏற்கனவே இருந்த கழிப்பறை உடைக்கப்பட்டு,புதிய கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. கல்லுக்கட்டியில், திறக்கப்பட்டுள்ள கட்டண கழிப்பறையை பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் (ரூ.1.50) பயன்படுத்தி கொள்ளலாம். கார் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், நான்கு மணி நேரத்துக்கு சைக்கிளுக்கு ரூ.1-ம், டூவீலருக்கு ரூ.2-ம், கார்களுக்கு ரூ.10ம் நகராட்சியால் வசூலிக்கப்பட உள்ளது.