Nagaratharonline.com
 
பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்:  Jan 7, 14
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆயிரத்து 28 சிறப்பு பேருந்துகளை தமிழகம்இயக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை கோயம் பேட்டில் இருந்து வரும் 10 தேதி 600 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

11-ம் தேதி 1,325 பஸ்களும் 12-ம் தேதி ஆயிரத்து 175 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. சென்னையை தவிர்த்தபிற பகுதிகளில் 10-ம் தேதி 345 பஸ்களும் 11-ம் தேதி 750, 12-ம்தேதி 760 பஸ்களும் 13-ம் தேதி ஆயிரத்து 220 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.சென்னையில் இருந்து 13-ம் தேதி 339பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதே அளவிலான பஸ்கள் வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இயக்கப்படும். 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய பஸ்களில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுளளது.