Nagaratharonline.com
 
கொன்னையூர் கோயிலில் இன்று தரிசன நேரம் மாற்றம்  Jan 14, 10
 
பொன்னமராவதி:கொன்னையூர் கோயில் நடை சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று (15ம் தேதி) சாத்தப்படுகிறது.பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயிலில் கங்கண சூரியகிரகணத்தை முன்னிட்டு இன்று (15ம் தேதி) காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.




காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சூரிய கிரகணம் நடைபெறுவதால் நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்தபின் மாலை 5 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் செயல் அலுவலர் நாகையா தெரிவித்துள்ளார்.

source : Dinamalar