Nagaratharonline.com
 
அரண்மனை சிறுவயல் : வீட்டில் கழுத்துரு,40 பவுன் நகை, வைரத்தோடுகள் திருட்டு  Dec 13, 13
 
அரண்மனை சிறுவயல், டி.வி.எஸ்., இல்லத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.இன்ஜினியரான இவர், மனைவி அழகம்மையுடன் மலேசியாவில் வசித்து வருகிறார்.

சொந்த ஊரான அரண்மனை சிறுவயலில் உள்ள வீட்டில் பீரோவில் 40 பவுன் மதிப்பிலான கழுத்துரு, வைரத்தோடு, வைர மோதிரம், வெள்ளி பாத்திரங்கள் என ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை வைத்திருந்தார். கடந்த ஜூன் 8ம் தேதிக்கு முன், இவரது வீட்டு, தாழ்வாரத்தின் வழியே கம்பியை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, அதில் இருந்த 40 பவுன் மதிப்பிலான கழுத்துரு, வைரத்தோடு, வைரமோதிரம்,வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்த, சீனிவாசனின் மனைவி அழகம்மை, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு நேற்று, கல்லல் போலீசில் புகார் செய்தார்.