Nagaratharonline.com
 
கொப்​ப​னா​பட்டி ஜல்​லிக்​கட்​டுக்​குத் தடை கோரி மனு:​ புதுக்​கோட்டை ஆட்​சி​யர் பதி​ல​ளிக்க  Jan 14, 10
 
மதுரை,​​ ஜன.12:​ புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் ஜல்​லிக்​கட்டு நடை​பெ​றும் இடங்​கள் பட்​டிய​லில் குறிப்​பி​டப்​பட்​டுள்ள கொப்​ப​னா​பட்​டியை பட்​டிய​லில் இருந்து நீக்​கக் கோரிய மனு​வுக்கு,​​ மாவட்ட ஆட்​சி​யர் பதி​ல​ளிக்க உயர் நீதி​மன்ற மது​ரைக் கிளை செவ்​வாய்க்​கி​ழமை உத்​த​ர​விட்​டது.​

​ ​ இது​கு​றித்து,​​ பொன்​ன​ம​ரா​வதி தாலுகா,​​ னா​பட்​டி​யைச் சேர்ந்த எம்.கே.ராம​நா​தன் தாக்​கல் செய்த மனு: ""கொப்​ப​னா​பட்டி ஊராட்சி கடந்த 1970}ல் கொப்பானாபட்டி, கொன்​னைப்​பட்டி என இரண்​டா​கப் பிரிக்​கப்​பட்​டது.​ இத​னால்,​​ இரு கிரா​மங்​க​ளுக்​கும் இடையே குளங்​க​ளில் தண்​ணீர் நிரப்​பு​வது முதல் பொது திரு​வி​ழாக்​கள் வரை மோதல் போக்கு நில​வி​வ​ரு​கி​றது.​

​ ​ மேலும்,​​ ஜல்​லிக்​கட்​டுத் திரு​விழா நடத்​து​வ​தில் இரு ஊராட்​சி​க​ளுக்​கும் இடையே உரி​மைப் பிரச்னை ஏற்​பட்​டுள்​ளது.​ இது​கு​றித்து,​​ 2009}ல் நடந்த மோத​லில் துப்​பாக்​கிச் சூடும்,​​ ஆர்.டி.ஓ.​ விசா​ர​ணை​யும்,​​ 21 பேர் மீதான குற்ற வழக்​கும் இன்​னும் நிலு​வை​யில் உள்​ளது.​

​ ​ இந் நிலை​யில்,​​ புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் ஜல்​லிக்​கட்டு நடை​பெ​றும் இடங்​கள் பட்​டிய​லில் கொன்​னை​யூர் மாரி​யம்​மன் கோயில் திரு​வி​ழா​வை​யொட்டி கொப்​ப​னா​பட்​டி​யில் ஜல்​லிக்​கட்டு என 7.9.2009}ல் குறிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​ இது ஏற்​கெ​னவே ஆர்.டி.ஓ.​ பிறப்​பித்த தடை உத்​த​ர​வுக்கு எதி​ரா​னது ஆகும்.​

​ ​ எனவே,​​ ஜல்​லிக்​கட்​டுக்​குத் தடை விதித்து,​​ பட்​டிய​லில் இருந்து பெயரை நீக்க உத்​த​ர​விட வேண்​டும் என மனு​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.​

​ ​ இந்த மனு நீதி​ப​தி​கள் பி.முரு​கே​சன்,​​ ராஜ​இ​ளங்கோ ஆகி​யோர் அடங்​கிய டிவி​ஷன் பெஞ்ச் முன் விசா​ர​ணைக்கு வந்​தது.​ அப்​போது,​​ மனு​வுக்கு புதுக்​கோட்டை மாவட்ட ஆட்​சி​யர் பதி​ல​ளிக்​கு​மாறு டிவி​ஷன் பெஞ்ச் உத்​த​ர​விட்​டது.

Source:Dinamani Jan 15