Nagaratharonline.com
 
நெற்குப்பை நகர சுப்பையா கோவிலில் 108 சங்காபிஷேகம்  Nov 18, 13
 
கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை,நெற்குப்பை நகர சுப்பையா கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான்.
கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே அவரை குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள்.

இதில் ஏராளமான நகரத்தார் பெருமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.