Nagaratharonline.com
 
NEWS REPORT: ஷார்ஜாவில் நகரத்தார் கூட்டமைப்பின் 150 வது கலந்துரையாடல்  Nov 13, 13
 
 
ஷார்ஜாவில் ஐக்கிய அரபு நாடுகளின் நகரத்தார் கூட்டமைப்பின் 150வது கலந்துரையாடல், அல் கத்ரி பண்ணை வீட்டில் நடைபெற்றது.

தொடக்கத்தில், குறளின் விளக்கத்தை ஆகாஷ் முத்து மாணிக்கம் விளக்கினார். அனுஸ்ரீ, சுபஸ்ரீ சங்கபாடலை பாடினர். மெய்யமை வள்ளியப்பனின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. செயலாளர் முத்துராமன் கதிரேசன் வரவேற்க, நிகழ்ச்சிகளை இராஜா கணேஷ் இராமநாதன் தொகுத்து வழங்கினார்.

வந்திருந்த தமிழ் ஆர்வலர்கள் பழ.பழனிப்பன், இரா.சொக்கலிங்கம், இரா.நடராஜன், பேராசிரியர் பீ.மு.மன்சூர், உமையாள் உரையாற்றினர். காசிவிஸ்வநாதன் தலைமையிலான புது நிர்வாக குழு உறுப்பினர்களை மற்றும் செயற்க்குழுவை சேதுவள்ளியப்பன் அறிமுகம் செய்தார். “சிக்கனத்தில் சிறந்தவர்கள் ஆச்சிமார்களா? செட்டியார்களா? என்ற பட்டிமன்றம் நடுவர் இரா.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தலைவர். இரமேஷ் இராமநாதன் நன்றி கூறினார்.