Nagaratharonline.com
 
மனஉறுதி இருந்தால் இந்தியாவை பெருமைப்படும் நாடாக உருவாக்க முடியும்: ப.சிதம்பரம் பேச்சு  Jan 12, 10
 
காரைக்குடி, ஜன. 10-

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 22- வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது. தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மோகனுக்கு மதிப்புறு இலக்கியவியல் முனைவர் பட்டத்தையும் அவர் வழங்கினார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ப.ராமசாமி வரவேற்று பேசினார்.

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீதியரசர் மோகனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவர் பல துறைகளிலும் திறமை பெற்றவர். திறமையான வக்கீல், கடமை உணர்வுமிக்க ஆசிரியர், சிறப்பான நீதிபதி. அவர் சிறந்த தமிழறிஞராக இருந்தபோதிலும், ஆங்கிலத் திலும் கவிதைகள் எழுதியுள்ளார்.

1995-ம் ஆண்டில் அவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றினை தற்போது நினைவு கூற விரும்புகிறேன். ஸ்பெக்டரம் ஒரு பொதுச்சொத்து என்றும், காற்று வழிகளையும், ஒளிபரப்பு அலைக் கற்றைகளையும் பயன்படுத்தும் உரிமையானது பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியே என்றும் அவர் தீர்ப்பளித்தார்.

அழகப்பா செட்டியார் தமிழ்நாட்டின் வறண்ட நில பகுதியில் உயர்கல்வியின் விதைகளை விதைத்தார். அந்த சமயத்தில் அந்த விதைகள் பல செடிகளாகத் தளைத்து, மரங்களாகி ஒரு பல்கலைக்கழகமாக உரு வாகி உள்ளது. அழகப்பா செட்டியார் தான் வாழும் நாட்களிலேயே வரலாற்றுப் பொன்னேட்டில் பெயரை பொறிக்குமாறு வாழ்ந்தார்.

உலகிலேயே விளையாட்டுகளில் சிறந்த நாடாக சீனா விளங்குவதற்கு முயற்சி செய்கிறது. காமன் வெல்த் விளையாட்டுகளை நடத்துவது பற்றி நாம் ஏன் நம் பாதையை குழப்பிக் கொள்ள வேண்டும்? இந்த கேள்விகளுக்கான பதில்களை பெற வேண்டு மானால், நீங்கள் உங்களுக் குள்ளே உற்று நோக்குங் கள் என்று கேட்டுக்கொள் கிறேன்.

என் பணியில் உயர்ந்த நிலையில் என்னை இட்டுச் செல்வதற்கான அறிவு, பயிற்சி, மனஉறுதி, ஆவல், பிறருடன் எளிதாக தொடர்பு கொள்ளும் திறன்கள் என்னிடம் உள்ளனவா என்று கேட்டுக் கொள்ளுங்கள். என் நாட்டைப்பற்றிய அக்கறை எனக்கு உள்ளதா என்றும் உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். இந்த கேள்விகளை பெரும் பாலானோர் கேட்டு, இதற் கான சரியான பதில் களை கண்டறிந்தால் இந்தியாவை நீங்களும், உங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் பெருமைப்படும்படியாக ஒரு சிறந்த நாடாக உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறை களிலும், உறுப்புக்கல்லூரி களிலும் பயின்று தேர்ச்சி பெற்ற 970 மாணவ- மாண விகளுக்கும் பல்கலைக் கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்து 6 மாணவ-மாணவிகளுக் கும், இணைப்புக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற 840 மாணவ- மாணவிகளுக்கும், தொலை தூரக்கல்வி வாயிலாக பயன்று தேர்ச்சி பெற்ற 23 ஆயிரத்து 911 மாணவ- மாணவிகளுக்குமாக சேர்த்து மொத்தம் 31 ஆயிரத்து 727 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இவர்களில் மாணவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 505 (52 சதவீதம்), மாணவிகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 (48 சதவீதம்) ஆகும். பல்கலைக்கழகத்தின் பல் வேறு துறைகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட 62 ஆய்வு மாணவர்களும், எம்.பில் ஆராய்ச்சிப்பட்ட ஆய்வில் முதல் இடம் பெற்ற 14 மாணவர்களும் கவர்னரிடம் நேரில் தமது பட்டங்களை பெற்றனர்.

இதுதவிர பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறை களில் முதுகலைப்பட்ட படிப்பில் முதல் இடம் பெற்ற 22 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை கவர்னர் நேரில் வழங்கினார்.

மேலும் இணைப்பு கல்லூரிகளில் பயின்று முதல் இடம் பெற்ற 37 மாணவர்களும், இணைப்புக் கல்வி திட்டத்தின் கீழ் பயின்று முதலிடம் பெற்ற 10 மாணவர்களும் கவர்னரிடம் நேரில் சான்றிதழ்களை பெற்றனர்.

விழாவில் மாவட்ட கலெக்டர்ள மகேசன்காசி ராஜன், சிண்டிகேட் உறுப் பினர்கள் உமையாள் ராமநாதன், காசிநாதன், சுடலைமுத்து, நடராஜன், அறிவுச்செல்வம், நட ராஜன், அப்துல்ஹமீது, சட்ட மன்ற உறுப்பினர் சுந்தரம், காரைக்குடி நகரசபைத் தலைவர் முத்துதுரை, சாக் கோட்டை ஒன்றியக்குழு தலைவர் சுப.முத்துராம லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Source: Maalaimalar Jan12