Nagaratharonline.com
 
நஷ்டம் எதிரொலி: சென்னை - கோவை துரந்தோ ரயில் சேவையை நிறுத்த முடிவு  Nov 3, 13
 
சென்னை - கோவை துரந்தோ ரயில், போதிய வருமானம் இல்லை என்று கூறி, அதன் சேவை வரும் டிசம்பர் மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் - கோவை, துரந்தோ ரயில் சேவைக்கான முன்பதிவு வரும் டிசம்பர் 9-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் டிக்கெட் விலையும் அதிகம். எக்ஸிக்யுடிவ் சேர் காரில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1680 (உணவு கட்டணம் உள்பட), ஏசி சேர் காரில் ரூ.875 கட்டணமாகும். துரந்தோ ரயிலில் காலை காபி, தண்ணீர் பாட்டில், காலை உணவு, மதிய உணவுக்கான கட்டணம் டிக்கெட்டுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. விலையும் அதிகம், பராமரிப்பும் இல்லை. இதனால் பயணிகள் இதில் பயணம் செய்வது மிகவும் குறைவு என்றும், இந்த ரயில்களால் ரயில்வே நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.