Nagaratharonline.com
 
ஆ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி : மண்டல கபடி போட்டிக்கு தகுதி  Oct 31, 13
 
தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கபடி போட்டியில் 5 குழுக்கள் கலந்து கொண்டன.

ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மாணவர்கள் முதலிடத்தை பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றனர். ஹாக்கி போட்டியிலும் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் முதலிடத்தை பெற்று மண்டல போட்டிக்கு தகுதி பெற்றனர்.