Nagaratharonline.com
 
மாவட்ட கோ-கோ போட்டி: நெற்குப்பை சாத்தப்பா பள்ளி முதலிடம்  Oct 25, 13
 
நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டைகல்வி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கோ-கோ போட்டிகளில் நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளி அதிக வெற்றிகளை பெற்றது.

நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் சஞ்சீவிராஜா தலைமை வகித்து துவக்கினார்.

மாணவர்கள் பிரிவில்,14 வயது பிரிவில் சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தேவகோட்டை தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், 19 வயது பிரிவில் சாத்தப்பா அரசுமேல்நிலைப்பள்ளி முதலிடமும், கல்லல் தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றனர்.

மாணவிகள் பிரிவில், 14 வயது பிரிவில், சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி, முதலிடத்தையும், குன்றக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும்,பெற்றனர். வென்றவர்களுக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பூவேந்தன், சான்றிதழ் வழங்கினர்.