Nagaratharonline.com
 
தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக்கிரீடம்  Oct 24, 13
 
தீபாவளித் திருநாளாம் வரும் நவம்பர் 2ஆம் தேதி காலை முதல் அருள்மிகு மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக்கிரீடம், தங்கக்கவசம் சாத்துப்படியாகும்.

அதேபோல, அருள்மிகு சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டையும், சாத்துப்படி செய்யப்படுகிறது. தீபாவளிச் சிறப்புப் பூஜைகளும் நடைபெறும் என திருக்கோயில் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.